சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் 79.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலை காட்டிலும் 3.81 சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது

கோவை: சூலூர் தொகுதியில் 121 இடங்களில் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 32 இடங்களில் உள்ள 45 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கோவை:சூலூர் தொகுதியில் 121 இடங்களில் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 32 இடங்களில் உள்ள 45 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

சூலூர் தொகுதியில் 15 சுயேட்சைகள் உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் கந்தசாமி, திமுக சார்பில் பொங்கலூர் பழனிசாமி, அமமுக சார்பில் சுகுமார், மநீம சார்பில் மயில்சாமி, நாம் தமிழர் சார்பில் விஜயராகவன் உள்ளிட்டோர் களமிறங்கினர். சூலூர் தொகுதியில் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 743 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 2 இலட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர். சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல வாக்குப்பதிவு் காலை 7 மணிக்கு துவங்கியது. 

காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்தனர். கண்ணம்பாளையம், எலச்சிபாளையம், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப பதிவு இயந்திரங்கள் பழுதானதால் அரைமணி நேரம் வரை வாக்கு பதிவு தடைபட்டது. சூலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரம் தலைகீழாக வைக்கப்பட்டதாக எழுந்த புகாரால், அதிமுகவினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அரைமணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதான இடங்களில் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 

சூலூர் இடைத்தேர்தல் மொத்தம் 79.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 75.60 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், கடந்த தேர்தலை காட்டிலும் 3.81 சதவீதம் கூடுதலாக வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது. இதைதொடர்ந்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்றது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் ஆகியவை பலத்த பாதுகாப்புடன், கோவை - தடாகம் சாலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான அரசினர் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

சூலூர் தொகுதியை தக்க வைக்கும் முனைப்போடு களமிறங்கியுள்ள அதிமுகவிற்கும், முதல் வெற்றியை பெறும் முனைப்போடு போட்டியிடும் திமுகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மே 23 ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது வாகை சூட போவது யார் என்பது தெரியவரும்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...