கோவை : காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நாலேட்ஜ் சென்டர் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டு தோறும் இஸ்லாமியர்களால் ரமலான் பண்டிகையையொட்டி, நோன்பு வைத்து இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல் மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர். இந்த நோன்பானது இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமையாக உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு, இந்த மாதம் 5-ம் தேதி பிறை பார்க்கபட்டு 6-ம் தேதி முதல் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதற்கான இந்த இஃப்தார் நிகழ்வு இன்று மாலை கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நாலேட்ஜ் சென்டர் சார்பில் நடைபெற்றது. மேலும், இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் இந்து, கிறித்தவ, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கலத்து கொண்டனர். பின்னர், சமூக ஒற்றுமை குறித்தும், இஸ்லாம் மதத்தின் சந்தேகங்கள் குறித்தும் இந்த நிகழ்வில் பேசப்பட்டது.