நீலகிரி : குன்னூரில் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கி வரும் நிலையில், தண்ணீர் தொட்டியில் இருந்து கடந்த சில நாட்களாக வீணாகும் நீரை தடுக்க நகராட்சி பொறியியல் பிரிவினர் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

குன்னூர் நகராட்சிக்கு ரேலியா அணை, ஜிம்கானா, கரன்சி உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து கொண்டு வரப்படும் நீர் கிரேஸ் ஹில் நீர்தேக்க தொட்டியில் சேமித்து, 30 வார்டுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இதில், ஓட்டுப்பட்டறை மோர்ஸ் கார்டன் அருகேயுள்ள குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரம்பி தண்ணீர் வீணாகி வெளியே சாலையில் ஓடியது.

இது குறித்து பொதுமக்கள் நகராட்சி பொறியியல் பிரிவு துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்வதால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், குடிநீர் வீணாகி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, இதனை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.