தன்னை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள் எனவும் அதிமுக வேட்பாளர் கந்தசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

அதிமுக சார்பில் கந்தசாமி, திமுக சார்பில் பொங்கலூர் பழனிசாமி, அமமுக சார்பில் சுகுமார், மநீம சார்பில் மயில்சாமி, நாம் தமிழர் சார்பில் விஜயராகவன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

கோவை: சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல வாக்குப்பதிவு் காலை 7 மணிக்கு துவங்கியது.

சூலூர் தொகுதிக்கு உட்பட்ட வதம்பச்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தில், அதிமுக வேட்பாளர் கந்தசாமி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

இதையடுத்து பேட்டியளித்த அதிமுக வேட்பாளர் கந்தசாமி, சூலூரில் வாக்குப்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். பொதுமக்கள் தமிழக அரசிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும்,எனது வெற்றி என்பது தமிழக அரசிற்கு கிடைக்கும் வெற்றி எனவும் அவர் கூறினார்.

சூலூர் தொகுதியில் அதிகமாக உள்ள நெசவாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது எனவும், சூலூர் தொகுதியில் அமோக வெற்றி பெறுவேன் எனவும் கூறிய அவர், எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என தெரிவித்தார்.

அமமுக ஒரு அமைப்பே அல்ல எனவும், எங்கள் பகுதியில் அந்த கட்சியே கிடையாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் காசிற்காக சிலர் அமமுக சென்றாலும், உண்மையான தொண்டர்கள் அதிமுகவிலேயே உள்ளனர் எனவும், அமமுக வெற்றியை பாதிக்காது எனவும் கந்தசாமி தெரிவித்தார்

சூலூர் தொகுதியில் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 743 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 2 இலட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர்.15 சுயேட்சைகள் உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதிமுக சார்பில் கந்தசாமி, திமுக சார்பில் பொங்கலூர் பழனிசாமி, அமமுக சார்பில் சுகுமார், மநீம சார்பில் மயில்சாமி, நாம் தமிழர் சார்பில் விஜயராகவன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...