சிங்கநல்லூர் குளப் பகுதியில் 453 தாவர இனங்கள் வளர்கின்றன : தாவர கணக்கெடுப்பில் தகவல்

கோவை : அண்மையில் நடத்தப்பட்ட தாவர கணக்கெடுப்பின் மூலம் சிங்கநல்லூர் குளத்தைச் சுற்றி மொத்த பரப்பளவு 453 தாவர இனங்கள் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

கோவை : அண்மையில் நடத்தப்பட்ட தாவர கணக்கெடுப்பின் மூலம் சிங்கநல்லூர் குளத்தைச் சுற்றி மொத்த பரப்பளவு 453 தாவர இனங்கள் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

தமிழக நகர்புறங்களில் இருக்கும் சதுப்பு நிலப்பகுதிகளில் முதல்முறையாக தாவரங்கள் பற்றிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில், சிங்காநல்லூர் குளம் பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய பகுதியாக இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், எதிர்கால கல்வி வாய்ப்புகளுக்கும் மற்றும் மாநிலத்தின் முதல் பாதுகாக்கப்பட வேண்டிய நகர் பல்லுயிர் மண்டலமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.



வன மரபியல் நிறுவனம் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனத்தின் பல்லுயிர் துறை தலைவர் சி. குன்ஹிகண்ணன் தலைமையின குழுவினர், குளத்தின் அனைத்து பகுதிகளில் ஆய்வு நடத்தி தாவரங்களின் வகைகளை சேகரித்தனர். அதில், சில தாவரங்களின் மாதிரிகள் மற்றும் புகைப்படங்களாக எடுத்துக் கொண்டு, வன மரபியல் நிறுவனம் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த குழுவினர் ‘சிங்காநல்லூர் குளத்தை சுற்றி மேற்கொண்ட புகைப்பட ஆவணங்கள் மற்றும் கணக்கெடுப்பு’ என்ற பெயரில் அறிக்கையை தயார் செய்து தேசிய களஞ்சியத்தில் சமர்பித்துள்ளனர். மேலும், வரும் ஆண்டுகளில் மூலிகை செடிகளை பாதுகாத்தால் மட்டுமே, எதிர்கால ஆய்வு கல்விக்கு அவற்றை பயன்படுத்த முடியும்.



“பிற நகரங்களிடன் ஒப்பிடுகையில் கோவை மாநகரில் இருப்பது சிறிய அளவிலான சதுப்பு நிலங்களே ஆகும். ஆனால், தாவர வகைகளுடன் ஒப்பிடும் போது, இந்த சதுப்பு நிலங்கள் உயர்வானவை. எனது 30 கால அனுபவத்தில், எங்கும் இல்லாத தாவர வகைகளை இங்கு நான் பார்த்துள்ளேன். மேலும், இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை எதிர்கால கல்விக்கான அடித்தளமாக இருக்கும்,” என்றார் வன மரபியல் நிறுவனம் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனத்தின் பல்லுயிர் துறை தலைவர் சி. குன்ஹிகண்ணன்.



மேலும், எதிர்காலத்தில் இந்த ஆவணங்களை ஒப்பிட்டு, விடுபட்டு போன தாவரங்களை எது, அது அழிவதற்கான காரணம் என்ன..? என்பதை நாம் அறிந்து கொள்ளலாம் என சிம்ப்ளிசிட்டியிடம் அவர் கூறினார்.



குயிப் அமைப்பை சேர்ந்த வி. சதீஷ் கூறியதாவது :- கோவை மாநகராட்சியுடன் குயிப் அமைப்பு இணைந்து குளத்தின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நகர்புற சுற்றுச்சூழல் அமைப்பு மனித வாழ்க்கைக்கு ஆதரமாக இருப்பதோடு, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் உதவிகரமாக இருக்கிறது. தற்போது, முழு பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாத நிலையில், அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. ஏராளமான மருத்துவ தாவரங்கள் மோசமான சூழ்நிலைகளிலும் கூட செழிப்பாக வளர்கின்றன. இருப்பினும், குளத்தை முறையாக பராமரித்தால் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு தாவரங்களின் வளர்ச்சியிருக்கும், என்றார்.



“சிங்காநல்லூர் குளத்தில் உள்ள தாவரங்களால் 92 வகையான பட்டாம்பூச்சிகள் இங்கு வசித்து வருகின்றன. குறிப்பாக தமிழக மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் எங்கும் இல்லாத, பிளாக் ஸ்பாட் பைரோட் என்ற அரிய வகை பட்டாம்பூச்சி இங்கு மட்டுமே காண முடிகிறது,” என்கிறார் பட்டாம்பூச்சி வல்லுநர் என். ஆனந்த்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...