வழி தவறிய புள்ளிமான் தெருநாய் கடித்து பலி

மோகனூர்: வழி தவறி வந்த புள்ளிமானை, தெருநாய்கள் கடித்து குதறியதில், படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தது.நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி கரையோரம் உள்ள அசலதீபேஸ்வரர் கோவில் அருகில் வாழைத்தோப்பு உள்ளது. இங்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு, புள்ளிமான் ஒன்று, வழி தவறி வந்தது. அதை பார்த்த, இரண்டு தெருநாய்கள் மானை துரத்தின. பயந்துபோன புள்ளிமான், கோவில் பின்புறம் உள்ள மயான சுற்றுச்சுவரை தாண்டி குதித்தது. அங்கு சுற்றி வளைத்த தெருநாய்கள் மானை கடித்து குதறின. அப்போது, ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்கள், தெருநாய்களை விரட்டி மானை மீட்டனர். இது குறித்து, மாவட்ட வன அலுவலர் காஞ்சனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனச்சரகர் கனகரத்தினம் உத்தரவின் பேரில், வனக்காப்பாளர்கள் அருள்குமார், மாதேஸ்வரன், அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால், அதற்குள் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மானை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செப்டம்பர் 30-க்குள் செலுத்த அறிவிப்பு

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027 முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்க...