திருப்பூரில் காதலிக்க வற்புறுத்தி தொல்லை செய்ததால் மனமுடைந்த சிறுமி விஷமருந்தி தற்கொலை : இருவர் கைது

திருப்பூர் : திருப்பூர் அருகே காதலிக்க வற்புறுத்தி தொல்லை செய்ததால் மனமுடைந்த 17 வயது சிறுமி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே காதலிக்க வற்புறுத்தி தொல்லை செய்ததால் மனமுடைந்த 17 வயது சிறுமி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த நாகராஜ் (45), மஞ்சு (35) தம்பதியினர். இவர்கள் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாய்ப்புக்காக திருப்பூர் மங்கலம் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். இந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் நாச்சியம்மாள் காலனிக்கு குடியேறி உள்ளனர். இவர்களுக்கு பிரியதர்ஷினி (17) என்ற மகள் உள்ளார். இவர் 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு நாச்சியம்மாள் காலனி பகுதியில் இருந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அந்த சிறுவனும் தன்னை அதிக வயதுடைய நபராக காட்டிக் கொண்டுள்ளார். இதனையடுத்து, கடந்த நான்கு மாதமாக பிரியதர்ஷினி அந்த சிறுவனின் செலவிற்கு பணம் கொடுத்துள்ளார். இதனிடையே, சிறுவனின் பழக்கவழக்கங்கள் பிடிக்காததால், அவனிடமிருந்து பிரியதர்ஷினி விலகியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிறுவன் பலமுறை பிரியதர்ஷினி பணிபுரியும் இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு பிரியதர்ஷினி உடன்படாததால் தனது நண்பர் மணிகண்டன் (22) என்பவரை உடன் அழைத்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தி மிரட்டியுள்ளார். இதில், மனமுடைந்த சிறுமி சாணிபவுடர் கரைத்து குடித்து உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த திருப்பூர் மத்திய காவல்நிலைய போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து 16 வயது சிறுவன் மற்றும் உடந்தையாக இருந்த மணிகண்டன் இருவரையும் கைது செய்தனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...