கோவை : கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் தந்தை, மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை வரதராஜபுரம், நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் உதயராஜ் (41). இவரும் இவரது தந்தை ஞானப்பிரகாசம் (67) இணைந்து அப்பகுதியில் யு.சி.வி. சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் ஏலச்சீட்டு நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். அவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இணைந்து மாதம் தோறும் ரூ. 5,000 முதல் ரூ. 50,000 வரை செலுத்தி வந்தனர். இந்த நிலையில், ஏலச்சீட்டு முடிந்து கமிஷன் போக, மீதமுள்ள முதிர்வுத் தொகையை தராமல் ஒவ்வொருவரிடமும் தலா ரூ. 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை சுமார் ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக அருள்மொழிவர்மன் என்பவர் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் உதவி ஆணையர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார், உதயராஜ் மற்றும் அவரது தந்தை ஞானப்பிரகாஷ் ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.