கோடை சீசனை முன்னிட்டு உதகையில் புகைப்பட கண்காட்சி இன்று தொடக்கம்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், இதன் ஒரு பகுதியாக உதகையில் புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கியது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், இதன் ஒரு பகுதியாக உதகையில் புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கியது.



 

ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில், பல்வேறு சுற்றுலாத் தலங்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என நடத்தப்படுவது வழக்கம். 



இதில், அரசு தோட்டக்கலை மையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புகைப்படக் கண்காட்சி இன்று தொடங்கப்பட்டது. 



இந்தப் புகைப்பட கண்காட்சியில் பறவைகள், வன உயிரினங்கள், பல்லுயிர் புகைப்படங்கள் என அனைத்தும் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புகைப்படமும் கலைநயத்துடன் மட்டுமல்லாமல் உயிரோட்டமாய் புகைப்படக் கலைஞர்கள் எடுத்திருப்பது பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது. 



மேலும், இதில் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை குறிக்கும் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்ததை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். ஒரு மாதம் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...