நீலகிரி : கோடை சீசனுக்காக அழகிய வண்ணச் செடிகளுடன் காட்டேரி பூங்கா தயாராக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. 'சுற்றிலும் பசுமை போர்த்திய மலைகள், தேயிலை எஸ்டேட்டுகள், ரன்னிமேடு ரயில்வே ஸ்டேஷன், நீர்வீழ்ச்சி' என அனைத்தும் ஒருங்கே அமைந்து இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ளதால், இந்த பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

நீலகிரியில் இங்கு மே மாதம் நடக்கும் கோடை சீசனுக்காக பிப்ரவரி மாத இறுதியில், பல்வேறு மலர் நாற்றுக்களின் நடவுப்பணிகள் நடைபெற்றன. அதில், ஆல்டர் நேந்திரா, குளோரோ பைட்டா, ஆஜகாஸ் ஆகிய செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வந்தது. அதுமட்டுமின்றி, டொரண்டா, ஒரிஷின் ஆகிய செடி வகைகளும் நடவு செய்யப்பட்டு, தற்போது இவைகள் மலர்ந்து கண்ணை கவரும் வகையில் இருக்கிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.