அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும் : அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி வலியுறுத்தல்

கோவை : கமலஹாசனின் நாக்கை அறுப்பேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவது சரியல்ல என்றும், அவ்வாறு பேசிய அமைச்சரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.


கோவை : கமலஹாசனின் நாக்கை அறுப்பேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவது சரியல்ல என்றும், அவ்வாறு பேசிய அமைச்சரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.



கோவையில் அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி சவுரிபாளையத்தில் உள்ள அவரது உறவினர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- பிரச்சாரத்தின் போது எப்படி பேச வேண்டும் என தெரியாமல் பேசுகின்றனர். அமைச்சர் பதவியில் இருப்பவர் நாக்கை அறுத்துவிடுவோம் என்று பேசுவது சரியல்ல. கமலஹாசன் தெரிவித்த கருத்து தவறு என்றால், தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கலாம். ஆனால், அதைவிடுத்து இப்படி பேசுவது சரியல்ல. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிணமறுக்கும் இடத்தின் மந்திரியா..?, தமிழகத்தின் மந்திரியா..?.

இதை பார்த்து விட்டும் முதலமைச்சரும் அமைதியாக இருக்கின்றார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும். மந்திரி பதவிக்கு தகுதியில்லாதவர் ராஜேந்திர பாலாஜி. அவரை கைது பண்ணிட வேண்டும். இல்லையெனில், நாளை முதலமைச்சரின் நாக்கறுப்பேன் என்று கூட சொல்லாம்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி எல்லாம் கிடையாது. அவர் பா.ஜ.க.வின் ஜால்ரா. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு, ஸ்டாலின் ஏன் சந்திரசேகர ராவை சந்திக்கின்றார். ஸ்டாலின் - சந்திரசேகர் ராவ் சந்திப்பு குழப்பமான சந்திப்பாகவே நாங்கள் கருதுகின்றோம்.

அதேபோல, நாக்கறுப்பேன் என்று பேசும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்தை ஏன் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டிக்கவில்லை. ஜெயலலிதா சாவில் மர்மம் என தெரிவிக்கும் ஓ.பி.எஸ், ஏன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை. முதலமைச்சர் இப்பொழுதெல்லாம் ஸ்டாலின், தினகரனுக்கு பதில் சொல்வதில்லை. உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் பதில் சொல்கின்றார். அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

முதலமைச்சர் பதவி கொடுத்தது சசிகலாவா..? இல்லையா..? என்பதை முதலமைச்சர் பழனிசாமி விளக்க வேண்டும். வரும் 23-ம் தேதி தேர்தல் முடிவிற்குப் பின்னர் எவ்வளவு பாலங்களில் என்ன மோசடி என்பது குறித்த பட்டியலை வெளியிடுவோம். 4 அல்லது 5 அமைச்சர்கள் சிறைக்கு போவதை யாராலும் தடுக்க முடியாது, எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...