வனப்பகுதியில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்த அவலம் : தண்ணீரை தேடி கிராமங்களை நோக்கி யானைகள் படையெடுக்கும் அபாயம்

கோவை : ஆனைகட்டி அருகே வன விலங்குகளுக்காக வனப் பகுதிகளில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகள் முறையாக பராமரிக்காததால், மனித - விலங்குகள் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை : ஆனைகட்டி அருகே வன விலங்குகளுக்காக வனப் பகுதிகளில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகள் முறையாக பராமரிக்காததால், மனித - விலங்குகள் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கோடை காலம் தொடங்கிவிட்டதால் வனங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், தண்ணீரின்றி அவதிப்படும் வனவிலங்குகள், குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருகின்றன. எனவே, இதனை தடுக்கும் வகையில், கோவை மாவட்டத்திற்குட்பட்ட ஆனைக்கட்டி வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில், துமனூர் பழங்குடியின கிராமத்தில் இரண்டும், கூட்டுப்புலிக்காடு, சலிம் அலி இயற்கை வரலாறு பறவைகள் மையம் மற்றும் ஆலமரமேடு ஆகிய பகுதிகளில் தலா ஒரு தொட்டியும் என மொத்தம் 5 தண்ணீர் தொட்டிகள் வனத்துறையினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஆலமரமேடு பகுதியில் உள்ள தொட்டியைத் தவிர்த்து பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 4 தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்துள்ளன. 



இதேபோல, ஆனைகட்டி மெயின் ரோட்டில் உள்ள ஆலமரமேடு பகுதியின் அருகே ஒரு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொட்டியில் தனியார் விவசாயப் பண்ணையின் உரிமையாளர் நீர் நிரப்பி வந்தார். ஆனால், தொட்டிக்கு செல்லும் தண்ணீர் குழாயில் தற்போது மிகப்பெரிய அடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் தொட்டி வறண்டு காட்சியளிக்கிறது. இந்த சூழலில் யானை உள்ளிட்ட மிகப்பெரிய உருவம் கொண்ட விலங்குகள் தண்ணீர் அருந்த அருகே உள்ள தனியார் செங்கல் சூளையில் உள்ள தொட்டிக்கு செல்வதால், மனித - விலங்குகள் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு சாலையைக் கடந்து வரும் விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

"நிறைய விலங்குகள் வாகனங்களில் அடிபடுகின்றன. அண்மையில் சாலையைக் கடந்து சென்ற யானை வேகமாக வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும், சிறு உயிரினங்கள் நாள்தோறும் வாகனங்களில் அடிபட்டு உயிரை இழக்கின்றன," என்கிறார் ஆலமரமேடு பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி.

"இதுபோன்ற நிலையில் உள்ள தண்ணீர் தொட்டிகளை வனத்துறையினர் முறையாக பராமரிப்பதில்லை. இதனை முறையாக கண்டு பராமரித்தால், மனித விலங்குகள் மோதலை தடுக்கலாம்," என சமூக ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...