Breaking : கோவையில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் 2 இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு

கோவை : கோவை - அவினாசி சாலையில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்களை அரிவாளில் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கோவை - அவினாசி சாலையில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்களை அரிவாளில் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை கணபதி பழைய சக்தி சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள் பிரதீப் மற்றும் தமிழ்வாணன். இவர்கள் இருவரும் அடிதடி வழக்கில் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் கையெழுத்திட்டு வந்தனர். இந்த நிலையில், இன்று இருவரும் வழக்கம்போல கையெழுத்திட்டுவிட்டு அவினாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. சர்ச் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து 2 இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், இளைஞர்கள் இருவரும் நிலை தடுமாறி மயங்கிவுடன் அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டனர். 



இதையடுத்து, தகவலறிந்து வந்த பந்தய சாலை போலீசார் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். மேலும், இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆணையாளர் எழிலரசு மற்றும் பந்தய சாலை காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ் ,ஹரி, தனபால் ,சூர்யா ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்த கத்திக்குத்துச் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...