கோவை : சூலூரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கிராம உதவி அலுவலரிடம் அ.தி.மு.க.வினர் பூத் சிலிப் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமி போட்டியிடுகின்றார். இந்த நிலையில், சூலூர் தொகுதிக்கு உட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக உதவி அலுவலர் (தண்டல்காரர்) தங்கவேல் தொடர்ந்து பணிபுரிந்து வரும் நிலையில், அவர் பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி தலைவர் பாலு என்ற பாலசுப்பிரமணியம் மற்றும் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் ஆறுமுகம் ஆகியோர் தண்டல்காரர் தங்கவேலுவை மிரட்டி பூத் சிலிப்பை பெற்றுள்ளதாகவும், தி.மு.க.வினர்களின் பூத் சிலிப்புகளை வழங்காமல், அ.தி.மு.க.வினரின் பூத் சிலிப்புகளை மட்டுமே வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி தி.மு.க. தேர்தல் பொறுப்பாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், அறிவரசு மற்றும் குறிச்சி பிரபாகரன் உள்ளிட்ட தி.மு.க.வினரும், பொதுமக்களும் கிராம நிர்வாக உதவி அலுவலர் தங்கவேலை சிறைப்பிடித்து தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.
இந்நிலையில், அ.தி.மு.க.வினர் அப்பகுதியில் கூடி, இந்த பிரச்சினை வெளியே தெரியாமல் இருக்க கிராம நிர்வாக அலுவலரை வெளியே விடக்கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை டி.எஸ்.பி. பாஸ்கரனிடம் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி தி.மு.க.வினர் சிறைப்பிடிக்கப்பட்ட கிராம நிர்வாக உதவி அலுவலரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.