தொடர் மழையினால் நீலகிரி மாவட்டத்தில் விடுதியிலேயே முடங்கிக் கிடக்கும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலுடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. இதனால், தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், இந்த கால நிலையை நாள்தோறும் வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனர். இந்த நிலையில், கடந்த 3 நாட்களாகப் பிற்பகலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.



குன்னூர், கோத்தகிரியில் சாரல் மழையும், உதகையில் சீரான இடைவெளியில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இந்த மழையால் மழைநீர் சாலைகளில் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், பலர் தங்கும் விடுதிகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. இந்த மழை அணைப் பகுதிகளிலும் பெய்துள்ளதால், கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...