போடி அருகே வீட்டில் ஏ.கே. 47, பிஸ்டல்கள், கத்தி, வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் : ஒருவர் கைது

தேனி : போடி அருகே உள்ள பொட்டல்களம் கிராமத்தின் ஒரு வீட்டில் இருந்து ஏ.கே 47 துப்பாக்கி, ஒரு ஸ்டென் கன், இரண்டு ஏர் பிஸ்டல்கள், ஒரு நாட்டுத் துப்பாக்கி, பட்டாக் கத்திகள், வாள், ஈட்டி போன்ற பயங்கர ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி : போடி அருகே உள்ள பொட்டல்களம் கிராமத்தின் ஒரு வீட்டில் இருந்து ஏ.கே 47 துப்பாக்கி, ஒரு ஸ்டென் கன், இரண்டு ஏர் பிஸ்டல்கள், ஒரு நாட்டுத் துப்பாக்கி, பட்டாக் கத்திகள், வாள், ஈட்டி போன்ற பயங்கர ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டல்களம் கிராமத்தில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஒரு வீட்டைச் சுற்றிவளைத்து சோதனை நடத்த முயன்ற போது, உள்ளே பதுங்கி இருந்த மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். வீட்டிற்குள் இருந்த ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார். அவரை கைது செய்து அந்த வீட்டை சோதனையிட்ட போது, இரண்டு சூட்கேஸ்களில் 5 ஏ.கே 47, ஸ்டென் கன், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்ததைக் கண்டு பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் கௌரி மோகன்தாஸ் என்பதும், அவர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்ததும் தெரியவந்தது. போலீசார் விசாரணையில் 10-க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களோடு பதுங்கி இருந்து தேனியின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. 10 மொபைல் போன்கள் போடி தாலுகா உதவி காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான தனிப்படையினர் கெளரிமோகன்தாசை கைது செய்து விசாரணை நடத்தினர். 

மேலும், அவரது வீட்டிலிருந்து ஒரு ஏ.கே 47 துப்பாக்கி, ஒரு ஸ்டென் கன், இரண்டு ஏர் பிஸ்டல்கள், ஒரு நாட்டுத்துப்பாக்கி, பட்டாக் கத்திகள், வாள், ஈட்டி போன்ற பயங்கர ஆயுதங்களும், 10-க்கும் மேற்பட்ட மொபைல் போன்களும் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து, போலீசார் நடத்திய சோதனையில் கோயில் கோபுர கலசங்களும், பல்வேறு சிலைகளும் கைப்பற்றப்பட்டன. அந்த பொருட்களைக் கொண்டு செல்லவும் கொள்ளையடிக்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. ஏ.கே. 47. துப்பாக்கிகளை ஆய்வு செய்த போலீஸார், அவை டம்மி துப்பாக்கிகள் என்று கூறியுள்ளனர். பின்னர், கைது செய்யப்பட்ட கெளரிமோகன்தாஸை போடி தாலுகா காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தப்பி ஓடிய கொள்ளையர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

தேனியில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் செயல்பட்டு வந்திருப்பது பொதுமக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர்கள் வெறும் கொள்ளை கும்பலா..? அல்லது யாரையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்ட தங்கியிருந்தார்களா..? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த கும்பலுக்கு கேரளாவில் நடந்த கொலைச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கேரள போலீஸாரும் தேனிக்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...