யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் சூலூரில் எனது பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு : கோவையில் கமல்ஹாசன் விளக்கம்

கோவை: சூலூரில் பிரச்சாரம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் நிர்வாகியின் மனைவி யாரோ ஒருவரின் தூண்டுதலில் பேசுகிறார் என கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.


கோவை: சூலூரில் பிரச்சாரம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் நிர்வாகியின் மனைவி யாரோ ஒருவரின் தூண்டுதலில் பேசுகிறார் என கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “ நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மக்கள் நீதி மய்யத்திற்கு மிகப்பெரிய சந்தோசத்தை தந்துள்ளது,”என்றார். அப்போது, பல்லடம் பகுதியில் மக்கள் நீதி மய்ய நிர்வாகி பாலமுருகன் உயிரிழந்த விவகாரத்தில் கமல்ஹாசன் பரப்புரை செய்ய தடை விதிக்க வேண்டும் என அவரது மனைவி விஜயகுமாரி புகாரளித்துள்ளது தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “கணவனை இழந்த மனைவியின் குரல் அல்ல. யாரோ ஒருவரின் தூண்டுதலால் பேசுகிறார். மக்கள் நீதி மய்யத்தினர் யாரும் அவரது குடும்பத்தை பார்க்க செல்லவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. இடைத்தரகர்கள் புகுந்து தங்களிடம் காசு கேட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு எனது உறவினர் மரணத்திற்கு கூட என்னால் செல்ல முடியவில்லை. அப்படியிருக்கையில் எல்லோரது மரணத்திற்கும் நான் செல்லவில்லை என குற்றச்சாட்டு கூறுவது ஏற்புடையது அல்ல.

மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சவுகரியம் போல பேசுகின்றனர். இவ்விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். 

தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். அவர்களது கருத்தை எங்களுக்கு வாழ்த்து சொல்வதாக கருதுகிறேன்,” என பதிலளித்தார்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...