உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி : அரசாணை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

சென்னை : தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வது, வாக்குச் சாவடிகள் அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை : தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வது, வாக்குச் சாவடிகள் அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது :- வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான மாதிரி படிவம் அளிக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி அடிப்படையில் வாக்குச்சாவடி வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் 2019 படிவமும் வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் இறுதி செய்வதற்கு 3 மாதம் கால அவகாசம் வேண்டுமென்றும், தற்போதைய சூழலில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதிக்கட்ட பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...