கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டின் குழும ஊழியர் பழனிச்சாமியின் மர்ம மரணம் தொடர்பாக விரிவான அறிக்கையை 15 தினங்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்திரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த பழனிச்சாமி என்பவர் கடந்த 3-ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கோவை காரமடை காவல்துறையினர் இந்த வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். ஆனால், பழனிச்சாமி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, பிரேத பரிசோதனை முடிந்த பின்னரும் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, பழனிச்சாமியின் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தப்பட வேண்டும், விசாரணையின் போது பழனிச்சாமியை தாக்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும், மார்ட்டின் குழும ஊழியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விரிவான அறிக்கையினை மாவட்ட நிர்வாகம் வரும் 15-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதுவரை உடலை பத்திரமாக பதப்படுத்தி வைக்கவும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் இந்த சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பழனிச்சாமியின் மரணம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியரும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 15 தினங்களுக்குள் ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட கண்காணிப்பாளர் நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஏற்கனவே, இந்த விவகாரம் நிதிமன்றத்தில் இருக்கும் நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் இப்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.