மறைந்த முன்னாள் எம்.பி ராமநாதனின் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி : திராவிட இயக்கத்தின் பல்கலை கழகமாக திகழ்ந்தவர் ராமநாதன் என புகழாரம்

கோவை : கோவையில் மறைந்த முன்னாள் எம்.பி. ராமநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தி.மு.க. தலைவஎ ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.


கோவை : கோவையில் மறைந்த முன்னாள் எம்.பி. ராமநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தி.மு.க. தலைவஎ ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.



கோவையில் உயிரிழந்த தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.இராமநாதன் இன்று காலை காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ராஜா வீதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மறைந்த எம்.பி. ராமநாதனின் உடலுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.



பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், மறைந்த எம்.பி. மு.இராமநாதனின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தி.மு.க.விலே இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தில் தொடங்கி, மிசா காலம் வரை அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். மக்கள் பிரதிநிதியாக இருந்து பல்வேறு பணிகளை மக்களுக்கு ஆற்றியுள்ளார். தி.மு.க.வில் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர்.

பொதுக்கூட்டம், திருமணம், பயிற்சி கூட்டங்கள் கருத்தரங்குகளில் தி.மு.க. கொள்கைகளை 5 முதல் 6 மணி நேரம் வரையிலும் பேசும் ஆற்றல் கொண்டவர். திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். அவருடைய மறைவு குடும்பத்திற்கு மட்டுமல்ல, தி.மு.க.விற்கும் பேரிழப்பு குடும்பத்தினருக்கும் தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.

தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, சாமிநாதன், பொங்கலூர் பழனிச்சாமி உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...