கோவை : தமிழ் மாநில காங்கிரசை பா.ஜ.க.வோடு இணைப்பது என்பது தற்கொலைக்கு சமம் என்பதை உணர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்களுக்கு மீண்டும் காங்கிரசுக்கே திரும்ப வேண்டும் என் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை : தமிழ் மாநில காங்கிரசை பா.ஜ.க.வோடு இணைப்பது என்பது தற்கொலைக்கு சமம் என்பதை உணர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்களுக்கு மீண்டும் காங்கிரசுக்கே திரும்ப வேண்டும் என் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிதுப்பதாவது :- பெருந்தலைவர் காமராஜரை 1966-ம் ஆண்டு டெல்லியில் உயிருடன் எரிக்க முயன்ற வகுப்புவாத கும்பலின் வாரிசாக விளங்கும் பா.ஜ.க.வோடு சேருவதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா..?. 1999-ம் ஆண்டு வாஜ்பாயின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு காரணமாக இருந்த 3 வாக்குகளை கொடுத்து உதவிய மக்கள் தலைவர் மூப்பனார் வழியில் வந்த நீங்கள் பா.ஜ.க.வில் சேருவதை ஏற்றுக் கொள்கிறீர்களா...?. தமிழ் மாநில தலைமை பா.ஜ.க. வில் சேருவதென முடிவு செய்தால், அந்த முடிவை காங்கிரஸ் உணர்வுள்ள இன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும். பா.ஜ.க.வில் இணைவது என்பது அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும்.
எனவே, நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் மாநில காங்கிரசில் இருக்கிற அனவரையும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கைகூப்பி அழைக்கிறேன். இளம் தலைவர் ராகுல் காந்தியின் போர்ப்படையில் இணைய வாருங்கள். இனியும் தமிழ் மாநில காங்கிரசில் இருப்பதில் எங்க பயனும் இல்லை. மே 23-ம் தேதிக்குப் பிறகு மத்தியில் வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு, ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி. அத்தகைய தேசிய நீரோட்டத்தில் கலக்க தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்களே வாருங்கள், என அழைப்பு விடுத்துள்ளார்.