கோவையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று குற்றவாளிகள் கைது

கோவை : சூலூர் அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை : சூலூர் அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சூலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மேலும், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தல், சங்கிலி பறிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இந்த கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் தங்களது காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை போலீஸார் பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில், பிடிபட்டவர்கள் பல்லடத்தை சேர்ந்த மரிய ஆல்பர்ட் நெல்சன்(23), சுரேஷ்(21), வினோத்(26) ஆகியோர் எனவும், சூலூரில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் எனவும் தெரிந்தது. 



இதையடுத்து, போலீஸார் மூன்று பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 20 பவுன் நகை, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...