கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வழிதவறிய சிறுவனை, சமூகவலைதளங்களால் பகிரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் இருந்து மீட்டனர்.

சுமார் 3 வயது மதிக்கத்தக்க சிறுவன் நேற்று மேட்டுப்பாளையம் காவல்நிலையம் அருகே உள்ள அரோமா பேக்கரி முன்பு வழி தெரியாமல் சுற்றித்திரிந்து கொண்டிருந்தான். இந்த சிறுவனை நமது மேட்டுப்பாளையம் சமூக ஆர்வலர் கணேசன் மீட்டு, மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் அச்சிறுவனை விசாரித்த பொழுது, அவனால் அவனது பெற்றோர் மற்றும் ஊரின் விபரங்களை சொல்லத் தெரியவில்லை. மேலும், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இச்சிறுவன் இருப்பதாகவும், சிறுவனை மீட்க சம்பந்தப்பட்டவர்கள் போலீசாரை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதன் மூலம் தகவல் தெரிந்து கொண்ட சிறுவனின் பெற்றோர், மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு வந்து சிறுவனை மீட்டுச் சென்றனர்.