பெரியநாயக்கன் பாளையம் அருகே தனியார் பேருந்து மோதிய கோர விபத்து : இளைஞர் பலி

கோவை : பெரியநாயக்கன் பாளையம் அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை : பெரியநாயக்கன் பாளையம் அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.



கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் (TN 66 E 9797) என்ற எண் கொண்ட தனியார் பேருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல, பெரியநாயக்கன்பாளையம் பகுதியிலிருந்து துடியலூரை நோக்கி ஸ்டீபன் பிரபு (22) என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருதார். அப்போது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்தின் முன்பு கட்டுப்பாட்டை இழந்த ஸ்டீபன் விழுந்துள்ளார். இதில், பேருந்தின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.



இதையடுத்து, பேருந்தின் அடியில் இருந்த நபரை எடுப்பதற்காக பொக்லைன் உதவியுடன் பேருந்தை கவிழ்த்தனர். பின்னர், இறந்த நபரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 



இந்த சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...