நீலகிரி : குன்னூர் அருகே கோயில் உண்டியலில் உள்ள பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கேத்தி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

குன்னூர் சோகத்தோரை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள விநாயகர் மற்றும் முருகன் கோவிலில் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த கோவில் உண்டியலைத் தூக்கிச் சென்றனர். மேலும், இரண்டு வீட்டில் கதவை உடைத்து திருட முயன்றுள்ளனர்.

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கேத்தி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, சி.சி.டி.வி. கேமராவில் உண்டியலைத் திருடிச்செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளதால், இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஓரிரு நாளில் பிடிபடுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.