கோவை : பீளமேடு அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வில் புகைப்படம் எடுப்பதற்கு ரூ. 40 இன்றி அவதிப்பட்டு வந்த மாணவனுக்கு, தக்க நேரத்தில் உதவிய காவலருக்கு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாராட்டுச் சான்றிதழை அளித்துள்ளார்.

கடந்த 5-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில், மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் வேகம் வேகமாக வந்தனர். இதில், ஒரு மாணவன் தேர்வு எழுத புகைப்படத்தை எடுக்காமல் வந்து விட்டார். இதனால், பதற்றமடைந்த மாணவன் தவித்துக் கொண்டிருந்த பொழுது, இதைக் கண்ட சரவணன் என்ற காவலர், புகைப்படம் எடுக்க ரூ. 40 ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றது.

இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், காலம் அறிந்து மாணவனுக்கு சரியான நேரத்தில் தேர்வு எழுத உதவிய சரவணனுக்குப் பாராட்டுக்களைக் கூறி சான்றிதழ்களை வழங்கினார். மேலும், இந்த பாராட்டு சான்றிதழ்களை வழங்கும் போது, மாநகர காவல் துணை ஆணையாளர் எல். பாலாஜி சரவணன் மற்றும் உளவுப் பிரிவு உதவி ஆணையாளர் சௌந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.