சூலூர் இடைத்தேர்தல் : மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளருக்கு கிறிஸ்துவ மக்கள் ஆதரவு

கோவை : சூலூர் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா. பழனிச்சாமிக்கு கிறிஸ்துவ மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கோவை : சூலூர் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா. பழனிச்சாமிக்கு கிறிஸ்துவ மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

சூலூர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா. பழனிச்சாமி போட்டியிடுகின்றார். இந்த நிலையில், சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலுவை 

டி.ஈ.எல்.சி. யின் லுத்தரன் முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் டாக்டர். ஈ.டி. சார்லஸ் தலைமையில் குருமார்கள் சந்தித்து தி.மு.க. விற்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது, சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ. வேலு அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். 



இதைத்தொடர்ந்து, டி.ஈ.எல்.சி.யின் லுத்தரன் முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேவாலயத்தில் நடைபெற்றது. இதில், சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிப்பது. அவர் வெற்றிபெற அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என சிறுபான்மை மக்களை கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஈ.டி. சார்லஸ் கூறியதாவது :- கடந்த மே மாதம் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அனைத்து கிறித்துவ சிறுபான்மை மக்களும் தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினோம். அதன்படி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், கிறிஸ்துவர்கள் அனைவரும் வாக்களித்தோம். அதில், தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற உள்ள சூலூர் உள்ளிட்ட 4 இடைத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம்.

இதைத்தொடர்ந்து, சூலூர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ. வேலுவை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருகூர், சூலூர், பட்டணம், சாமளாபுரம், காமநாயக்கன் பாளையம், வாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2,500-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ வாக்காளர்கள் உள்ளனர். அனைவரும் தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள், என்று கூறினார். 

சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ. வேலு சந்திப்பின்போது, டி.ஈ.எல்.சி.யின் லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர். ஈ.டி. சார்லஸ், குருமார்கள் ஜெயசந்திரன், ஜெயராஜ், வில்சன், ஸ்டேன்லி மற்றும் காந்தி, ராஜேந்திரன், பாஸ்கர், திவாகர், பென்னி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...