கோவை : பாதுகாப்பான சாலை பயணம் மற்றும் புதிய அனுபவத்தை தி ரோட் டிரிப்ஸ் கோ வழங்கும் என ரோட் டிரிப்ஸ் மைய உறுப்பினர் தீபக் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கோவை பிரஸ் கிளப்பில் தி ரோட் டிரிப்ஸ் கோ மைய உறுப்பினர் தீபக் ஆனந்த் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது :- கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு 5 பேர் கொண்ட குழு தொலைதூர வாகனம் ஓட்டும் அமைப்பை மும்பையில் துவக்கியுள்ளனர். அதிகமானோரின் விருப்பம் காரணமாக, தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இது செயல்பட்டு வருகிறது. இதுவரை 18 மாநிலங்களில் இது செயல்பட்டு வருகிறது. தற்போது கோவையில் இது துவங்கப்பட்டு உள்ளது. வார விடுமுறை நாட்களில் வெளி இடங்களுக்கு சென்று புதிய அனுபவத்தைப் பெறும் வகையில், பாதுகாப்பான கூட்டுப் பயணமே இதன் நோக்கம். இந்த பயணங்களின் போது உடன் வருபவர்களை நடத்தி செல்ல வாகனங்களின் முன்னும் பின்னும் பைலட் வாகனங்கள் பாதுகாப்பாக வழி நடத்திச் செல்லும். பயணிக்கும் இடங்களில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு முறையான அறிவுரைகள் வழங்கப்பட்டு, சீரான வேகத்தில் வாகனங்கள் இயக்குவதன் மூலம் பாதுகாப்பு மற்றும் இனிமையான பயணமாக இது அமையும். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. அவரவர் வரும் வாகனங்களுக்கு எரிபொருள், உணவு, தங்கும் விடுதி செலவுகள் சமமாகப் பிரித்துக் கொள்ளப்படும். இதுவரை இதில் 7,000 பேர் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள் உள்ளதால், இங்கு உள்ளவர்கள் அதிக ஈடுபாட்டுடன் கலந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
முன்பதிவிற்கு www.facebook.com/theroadtripsco பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதள முகவரிகளில் பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை நடைபெற்ற தொலைதூரப் பயணங்களில் மும்பையில் இருந்து கர்நாடக மாநிலம் அன்ஜூம் ஏரி வரை 300 கி.மீ. பயணம் செய்ததே அதிகபட்ச தூரமாகும். பெண்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதுவரை 550 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளனர். கோவையில் முதல் ரோட் டிரிப் வரும் 11-ம் தேதி ஏற்பாடு செய்ய உள்ளோம். இது தொடர்பாக சந்தேகங்களுக்கு கோவை பிரிவு தலைவர் சத்திய நாராயணனை 9791220641 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்தார்.