7 பேரின் விடுதலையில் ஆளுநர் இந்த முடிவைத்தான் எடுக்க வேண்டும் என நிர்பந்திக்கக் கூடாது : திருப்பூரில் கே.எஸ். அழகிரி பேட்டி

திருப்பூர் : பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றும் , இந்த முடிவை தான் எடுக்க வேண்டும் என ஆளுநரை வலியுறுத்தக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றும் , இந்த முடிவை தான் எடுக்க வேண்டும் என ஆளுநரை வலியுறுத்தக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்க வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தேனியில் 2 வாக்குசாவடிக்கு எந்த கட்சியும் மறுவாக்குப்பதிவு கேட்காத போது, எதற்காக மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும். அதேபோல, மிகக்கடுமையான வார்த்தைகளை சமீப காலத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தி வருகிறார். மேலும் , மரபுகளுக்கு விரோத செயல்களில் மோடி ஈடுபடுகிறார். சொந்த அமைச்சர்களையே நம்பாத மோடி , ராஜீவ் காந்தியை குற்றம் சொல்கிறார். இந்திய அரசியலில் கொலைகள் செய்த ஒரே கட்சி மோடி சார்ந்துள்ள பாரம்பரியம் தான். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்றவை தான் வன்முறைகளில் ஈடுபட்டன, என்றார். 

மேலும் , 3-வது அணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- தி.மு.க. என்பது அரசியலில் பக்குவப்பட்ட இயக்கம், சந்திரசேகரராவ் ஒருவேளை ஸ்டாலினை சந்தித்து மூன்றாவது அணி குறித்து பேசினாலும் , அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று தான் ஸ்டாலின் கூறுவார். தற்போதைய நிலையில், இந்தியாவில் மதசார்புள்ள கட்சி , மதச்சார்பற்ற கட்சி என இரண்டு தான் உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நிற்பது என்பது , இப்போதையை சூழலில் சாத்தியமற்றது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளால் இளைஞர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகும் நிலை உள்ளது. கன்னியாகுமரி வசந்தகுமாரிடம் உங்கள் தொகுதியில் வாக்குக்கு எவ்வளவு பணம் கொடுக்கப் போகிறீர்கள் என்று நானே கேட்டேன். ஆனால் , அந்த ஊரில் பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை என்று அவர் சொன்னதாகக் குறிப்பிட்டார். 

தொடர்ந்து, 7 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு, ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று தான் உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்தைத் தான் முடிவாக எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. ஆளுநர் எப்படி வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம். மேலும், ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் என்று எங்கள் கட்சி தலைமை ஏற்கனவே சொல்லிவிட்டது. சட்டத்திற்கு உட்பட்டு எது நடந்தாலும் எங்களுக்கு சம்மதமே.. இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. நீதி இவ்வாறு தான் வழங்கப்பட வேண்டும் என சிறு சிறு குழுக்கள் முடிவு செய்யக் கூடாது, என்றும் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...