லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிச்சாமி மரண சம்பவம் : விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமியின் மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமியின் மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரமடை அருகே வெள்ளியங்காடு குளத்தில் கடந்த 3ம் தேதி லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும், எனவே, இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மகன் ரோகின் குமார் மனு தாக்கல் செய்தார். மேலும், பிரேத பரிசோதனை நடக்கும் போது தங்கள் தரப்பு ஆட்கள் இருக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்ட போது, காசாளர் பழனிச்சாமியின் மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, பழனிச்சாமியின் உடலை கோவை அரசு மருத்துவமனையிலேயே வைத்திருக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...