Breaking : பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை ஆளுநரே முடிவெடுப்பார் : உச்சநீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளி விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளி விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் நளினிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் குடியரசு தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். இதனிடையே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார். இதற்காக சட்டசபையில் அவர் தீர்மானமும் கொண்டு வந்தார்.

அந்த தீர்மானத்தை அவர் மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கேட்டார். ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அதற்கு பதில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனிடையே, ராஜிவ் காந்தியை கொலை செய்வதற்கான குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த காவல் ஆய்வாளரின் மகன் அப்பாஸ் மற்றும் காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்க நாராயணன் உள்ளிட்டோர் 7 பேரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தாக்கல் செய்து நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டதால், அது காலாவதி ஆகிவிட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, மனுதாரர் தரப்பில் இருந்து அப்டேட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே, 7 பேரின் விடுத்லை தொடர்பான வழக்கில், ஆளுநர் முடிவெடுப்பார் என தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...