தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு : தமிழக தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் 18-ம் தேதி நடந்த மக்களவை, 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் நடந்ததாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்தது. இதையடுத்து, 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதையடுத்து, வாக்குச்சாவடிகளில் நடந்த பிரச்சினை குளறுபடிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிக்கை அளித்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் மே 19-ம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, தருமபுரி - 8 வாக்குச்சாவடிகளுக்கும், திருவள்ளூர், கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வாக்குச்சாடிகளிலும், தேனியில் 2 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...