தாழ்த்தப்பட்டவங்களா பொறந்தது தப்பா..? : கோவையில் சாதியக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க பேட்டி

கோவை : மதுக்கரையை அடுத்த குமுட்டிபதி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் வர அனுமதி மறுத்த நிலையில், உயர் சாதியில் ஒரு பிரிவினர் தாழ்த்தப்பட்ட மக்களை கடுமையாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மதுக்கரையை அடுத்த குமுட்டிபதி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் வர அனுமதி மறுத்த நிலையில், உயர் சாதியில் ஒரு பிரிவினர் தாழ்த்தப்பட்ட மக்களை கடுமையாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மதுக்கரையை அடுத்த குமுட்டிபதி பகுதியில் குமுட்டிபதி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் மூன்று நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று அதே பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் முளைப்பாரியை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றனர். அப்போது, அங்கிருந்த உயர் சாதிப் பிரிவினர் தாழ்த்தப்பட்டவர்களை ட்ரம்ஸ் அடித்து கோவிலுக்குள் வரக்கூடாது என மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், கெட்டவார்த்தையால் திட்டியுள்ளனர்.

இதையடுத்து, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் எங்களுக்கும் கோயிலுக்குள் போக உரிமை உண்டு என தெரிவித்துள்ளனர். இதில், ஆத்திரமடைந்த உயர் சாதிப் பிரிவினரில் ஒரு குழுவினர் கட்டை போன்ற கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து ஆண், பெண் என பார்க்காமல் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில், சரத்குமார் (19), ஜெயபிரகாஷ் (33), மாரியம்மாள் (35), சரிதா (27), துளசியம்மாள் (80), முருகாத்தாள் (48) உள்ளிட்ட சிலர் கோவை அரசு மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் குமுட்டிபதி பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறியதாவது :- நாங்கள் முளைப்பாரி மாவிளக்கு எடுத்துக் கொண்டு இன்று மாலை 4 மணிக்கு கோவிலுக்கு போயிட்டு இருந்தோம். நாங்கள் எல்லாம் குடும்பத்துடன் ட்ரம்ஸ் அடித்து சந்தோசமாக சென்றோம். அப்போது, அங்கு வந்த உயர் சாதிக்காரர்கள் எங்களை தகாத வார்த்தையால் சாதியை சொல்லி எதுக்கு நீங்க வரீங்க என திட்டினார்கள். அதையும் மீறி நாங்கள் கோயில் அருகே சென்றோம். அப்புறம் நாங்கள் மாவிளக்கை வெளியிலேயே வைத்தோம். அப்போது ஒரு சிலர் எங்கள் பின்னாடியே குச்சியை எடுத்துட்டு வந்தார்கள். திடீரென 50 பேருக்கு மேல் எங்களை சாதியை சொல்லி கெட்டவார்த்தையில் திட்டி திடீரென அடிக்கத் தொடங்கினர். பின்னர், கத்தி, கட்டையென கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து தாக்கினர். ஆண்கள், பெண்கள் என பார்க்காமல் அடித்தனர். வயதானவர்களை எல்லாம் கீழே தள்ளி அடித்தார்கள். 

நாங்கள் எல்லாம் மனுஷங்களா..? இல்லையா...?.தாழ்த்தப்பட்டவங்களாக பிறந்தால் இவ்வளவு கேவலப்பட வேண்டுமா..?. எங்கள் ஊரில் எங்கள் காலம் காலமாக இப்படி தான் அசிங்கப்படுத்துகிறார்கள். தாழ்த்தப்பட்டவங்களா பொறந்தது தப்பா..?. இல்ல, தாழ்த்தப்பட்ட நாங்கள் புது ஆடை போட்டு சந்தோசமாக கோவிலுக்கு வந்தது தப்பா..?, என கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேசியபடி சென்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...