ஜெ., எதிர்த்த ஜி.எஸ்.டி. அனுமதிக்கப்பட்டதால் 6 லட்சம் பேருக்கு வேலை இழப்பு : சூலூரில் தினகரன் பிரச்சாரம்

கோவை : ஜெயலலிதா எதிர்த்த ஜி.எஸ்.டி.யை இந்த ஆட்சியாளர்கள் அனுமதித்து விட்டதாகவும், இதனால் 6 லட்சம் பேருக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கோவை சூலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

கோவை : ஜெயலலிதா எதிர்த்த ஜி.எஸ்.டி.யை இந்த ஆட்சியாளர்கள் அனுமதித்து விட்டதாகவும், இதனால் 6 லட்சம் பேருக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கோவை சூலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளபாளையத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமாருக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கொண்டு வந்து மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வரவேண்டும். விவசாயிகளை பாதிக்கின்ற திட்டங்களையும், ஜி.எஸ்.டி.யையும் ஜெயலலிதா கடைசி வரை அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இந்த எடப்பாடி அரசு அவற்றை அனுமதித்து விட்டனர். ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டதால், 6 லட்சம் பேருக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அரசால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கூட பரமாரிக்கவில்லை. நீதிமன்றம் சொன்னதால்தான் பொள்ளாச்சி விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜெ. படத்தை சட்டமன்றத்தில் வைக்கக் கூடாது என்று சொன்ன தே.மு.தி.க., ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டக் கூடாது என எதிர்த்த பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்திருக்கின்றார். எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்யும் விதத்தில் நடந்து கொண்டதால் 18 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், அவர்களை பழனிச்சாமி அரசு தகுதி நீக்கம் செய்தது. இப்போது மக்கள் எதிராக இருப்பதால், பழனிசாமியின் ஆட்சி முடிவிற்கு வரும் நிலை ஏற்பட்டு விட்டது.

கொங்கு மண்டல மக்கள் நியாயத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தவர்களை தண்டிக்க வேண்டும். சசிகலா சகோதரனாக நினைத்து பழனிசாமியை முதலமைச்சராக்கினார். ஆனால், அவர் பதவிக்காக துரோகம் செய்து விட்டார். எட்டப்பர் பெயரை போல எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பெயர்கள் பதிந்து இருக்கின்றது. கள்ளபாளையம் பகுதியில் நிலத்தடி நீர் மேம்படுத்தவும், பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பாசன வசதி செய்ய வேண்டும். விசைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகையும், 60 வயது நிறைந்த விசைத்தறி தொழிலாளர்களுக்கு உதவி தொகை, அரசு மருத்துவமனை தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும், என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையர்பாளையத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமாருக்கு ஆதரவாக டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “தமிழகத்திற்கு பிடித்து இருக்கின்ற துரோகத்தை துடைத்து எறிய வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கின்றது. நடந்து முடிந்த 18 தொகுதி இடைத்தேர்தலிலும் பழனிசாமிக்கு டெபாசிட் காலியாகி விடும். துரோகத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். அதனால்தான், ஆர்.கே. நகரில் இரட்டை இலையை தோற்கடித்தார்கள். ஜெயலலிதா நீட் தேர்வை எதிர்த்தார். ஆனால், இவர்கள் நீட் தேர்வை அனுமதித்து விட்டார்கள். மோடிக்கு பயந்து விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களையும் கொண்டு வந்துள்ளனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு 6 ஆயிரம் விலை பேசிய போதும், அதை ஏற்க மறுத்து அப்பகுதி மக்கள் வாக்களித்ததை போல நீங்களும் வாக்களிக்க வேண்டும்.

நெசவு தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு கடனுதவி வழங்கப்படும். விசைத்தறி நெசவு பூங்கா அமைக்கப்படும். சூலூர் பகுதியை தலைமையிடமாக கொண்டு வணிக வரி அலுவலகம் அமைக்கப்படும்,” என பிரச்சாரத்தின் போது டிடிவி தினகரன் வாக்குறுதி அளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...