நீலகிரி : குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையை தொடர்ந்து, காபி பூக்கள் பூத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குன்னூர், கோத்தகிரி பகுதியில் சில விவசாயிகள் தேயிலைக்கு அடுத்து, காபி விவசாயத்தில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அரபிக்கா, ரோபஸ்டா வகை காபி விளைவிக்கப்படுகிறது. இதில், கடந்த ஆண்டு கோடை மழையும், தொடர்ந்து பருவமழையும் சரியான நேரத்தில் பெய்ததால், காபி விளைச்சல், அமோகமாக இருந்தது. அறுவடை முடிந்து, கடந்த பிப்., மாதம் முதல் காபி மொட்டுகள் வர துவங்கின. அப்போது, மழை இல்லாததால் பல தோட்டங்களில் பூ பூக்காமல், மொட்டுகள் கருகிவிட்டன. இதனால், காபி உற்பத்தி கடந்த ஆண்டை விட 30 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரம் முதல் பெய்து வரும் மழையால், காபி செடிகளில் பூக்கள் பூத்துள்ளன. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது, காபி செடியில் பூக்கள் பூத்துள்ளன. 25 மி.மீ., முதல் 50 மி.மீ., மழை பெய்தால் நல்ல விளைச்சல் இருக்கும். இதற்கு அதிகம் பலத்த மழை பெய்தாலும், காபி பூக்களுக்கு பாதிப்பை ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.