கோவை : ஆனைகட்டி அருகே காட்டு யானை தாக்கியதில் 80 வயது மூதாட்டி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைகட்டி அருகே உள்ள கொண்டனூர் புதூரைச் சேர்ந்தவர் என். பொன்னம்மாள் (80). இவர், தனது விவசாய நிலத்திற்கு சென்று இயற்கை உபாதையை கழித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை பொன்னம்மாளை தாக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், பொன்னம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பொன்னம்மாள், கொண்டனூர் வனத்துறை குழுவின் தலைவர் நஞ்சனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
கொண்டனூர் புதூர் கிராமத்தில் முறையான கழிப்பறை வசதி இல்லாததால், திறந்தவெளி பகுதியில் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.