கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கிட போதுமான அளவு தாய்ப்பால் தானம் கிடைக்க பெறுவதில்லை : தனியார் தொண்டு நிறுவனம் தகவல்

கோவை : கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கிட போதுமான அளவு தாய்ப்பால் தானம் கிடைக்க பெறுவதில்லை என தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவை : கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கிட போதுமான அளவு தாய்ப்பால் தானம் கிடைக்க பெறுவதில்லை என தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.



உலக அன்னையர் தினம் வரும் 12ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை பேரெண்டிங் நெட்வொர்க் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில், அந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா கூறியதாவது :- அமைதியான மகிழ்வான பேறு காலம் மற்றும் பிரசவம் மேற்கொள்ள “Heart in the Tummy 2” நிகழ்வினை நடத்த உள்ளோம். தனியார் விடுதியில் நடைபெறும் இந்நிகழ்வில் பர்த் இந்தியா அமைப்பின் நிறுவனர் ரூத் மாலிக், மகப்பேறியில் மற்றும் பெண்ணியல் மருத்துவர் பிரமலதா, பாலூட்டுதல் ஆலோசகர் யபத் யாஸ்மின், சுக பிரசவ ஆலோசகர் பிரியங்கா இதிசுலா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில், பிரசவம் தொடர்பான பல்வேறு கலந்துரையாடல் நடைபெறும். சிசேரியன் மூலம் முதல் பிரசவம் ஆகி இருப்பின், அடுத்த குழந்தையும் அதேபோல் சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்க வேண்டும் என்பது இல்லை என பலருக்கு போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை. இது போன்ற பல்வேறு சந்தேகங்கள் குழந்தை வளர்ப்பு குறித்து தாய்மார்களுக்கு விளக்கும் வகையில், இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

மேலும், தங்களது அமைப்பின் மூலம் பல்வேறு சந்தேகங்களுக்கு ஐவர் கொண்ட குழு தொடர்ந்து பெண்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

அரசு மருத்துவனையில் உள்ள தாய்பால் வங்கிக்கு கைவிடபட்ட குழந்தைகளுக்கு வழங்கிட போதுமான அளவு தாய்பால் தானம் கிடைக்க பெறுவதில்லை. ஆரம்பத்தில் 2-3 பேர் மட்டுமே வழங்கி வந்த நிலையில், தற்போது 20 முதல் 30 பேர் வழங்கி வருகின்றனர். ஆனால், இது கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க போதுமானதாக இல்லை. இது குறித்து இன்னும் போதுமான விழிப்புணர்வு மக்களிடையே சென்று அடையவில்லை. முதல் முறையாக பிரசவத்தின் போது உடன் இருந்த கணவர்கள் தங்களது எண்ணங்களை இந்த நிகழ்வின்போது பேச உள்ளனர். பிரசவத்தின் போது ஒருவர் உடன் இருக்கலாம் என்ற சட்டம் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வருகிறோம்.

இந்நிகழ்ச்சி பாப்பீஸ் ஹோட்டலில் வரும் 12ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பதிவு கட்டணமாக 800 ரூபாயும், 9ம் தேதிக்கு முன் முன்பதிவு செய்பவர்களுக்கு 650 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...