உதகையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சூட்டிங் மட்டம் : அலைமோதும் கூட்டத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி

நீலகிரி : கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், உதகையை அடுத்த பகல்கோடு மந்து என்றழைக்கப்படும் சூட்டிங் மட்டம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.



ஆண்டுதோறும் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவது சூட்டிங் மட்டம் என்றழைக்கப்படும் பகல்கோடு மந்து.

சூட்டிங் மட்டம் என்று பெயர் வர தமிழ் உட்பட பல மொழி படங்கள் இப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். செங்குத்தான இப்பகுதியில் பாம்பு போன்ற வளைவுகளில் நடைபாதையில் நடந்து செல்வது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புது அனுபவமாக உள்ளது. மலையின் மேல் பகுதிக்கு சென்றால் அழகான மலைகள், இயற்கை சூழ்நிலைகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இப்பகுதி உதகை, கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தோடர் இன மக்கள் இப்பகுதியை பராமரித்து வருகின்றனர். இதன் நுழைவு வாயில் பகுதியில் தோடர் இன மக்களின் பாரம்பரிய கலை நயத்துடன் டிக்கெட் வழங்கும் இடம், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.



கோடை வெயிலை சமாளிக்க இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு குவிந்து வருவதால், சுற்றலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...