பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு : கோவை மாநகராட்சி பள்ளிகளில் 94. 72 சதவீதம் தேர்ச்சி

கோவை : பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் 94. 72 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவை : பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் 94. 72 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், தமிழகம், புதுச்சேரியில் 7,278 பள்ளிகளில் இருந்து 8,16,618 மாணவ, மாணவியர் மற்றும் 5,032 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,21,650 பேர் புதிய பாடத் திட்டத்தின் கீழ் முதல் பொதுத் தேர்வினை எழுதினர். இந்தப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில், தமிழகம் முழுவதும் மொத்தம் 95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கோவை மாநகராட்சியின் கீழ் உள்ள 16 பள்ளிகளில் 94. 72 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு 88.61 ஆக இருந்தது. இந்த ஆண்டில் 6.11 சதவீதம் கூடுதல் தேர்ச்சியாகும். மொத்தம் 2,139 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், 2,026 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...