Exclusive report: கோவையில் கால் பதிக்கும் சைக்கேடேலிக் ராக் : பொள்ளாச்சியில் இளைஞர்களின் போதை விருந்தில் அம்பலம்

கோவை : கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அமைதியான பேச்சும், அழகான தென்றல் காற்றும் தான். ஆனால், கடந்த சில மாதங்களாகவே பொள்ளாச்சி என்றாலே மனதை உருக்கும் விவகாரங்களும், சட்டவிரோத நடவடிக்கைகளும் தான் அதிகம் வெளியாகி வருகிறது. மேலும், பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்த இடமாக இருந்தது பண்ணை வீடு என தொடர்ந்து சமூகவலைதளங்களில் பரவி வந்தது. அதேபோல, அந்த பண்ணை வீட்டின் தகவல்களும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.


கோவை : கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அமைதியான பேச்சும், அழகான தென்றல் காற்றும் தான். ஆனால், கடந்த சில மாதங்களாகவே பொள்ளாச்சி என்றாலே மனதை உருக்கும் விவகாரங்களும், சட்டவிரோத நடவடிக்கைகளும் தான் அதிகம் வெளியாகி வருகிறது. மேலும், பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்த இடமாக இருந்தது பண்ணை வீடு என தொடர்ந்து சமூகவலைதளங்களில் பரவி வந்தது. அதேபோல, அந்த பண்ணை வீட்டின் தகவல்களும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.



இப்படி பரபரப்பாக போய்க் கொண்டிருந்த பண்ணை வீட்டின் விவகாரங்கள் ஓய்வதற்கு முன், மீண்டும் போதை விவகாரங்கள் பொள்ளாச்சியை சுற்றியுள்ள தோப்பு வீடுகளில் அரங்கேறி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதேபோல, ரிசார்ட்டுகள் என்று எழுதப்பட்டுள்ள தோப்பு வீட்டில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களும், இசையில் கலந்த வசீகர போதைகளும் இளைஞர்களை அடிமையாக்க வலை விரித்தது. இந்த வலையில் விழுந்த இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பதிவு செய்து இந்த தோப்பு வீட்டிற்கு வந்தனர். இதில், இளைஞர்கள் முதலில் மது போதைகளை குடித்துவிட்டு, பின்னர் தடை செய்யப்பட்ட பல வகையான போதைப் பொருட்களை உட்கொண்டு போதையின் உச்சிக்கே சென்றனர். போதையின் உச்சிக்கே சென்ற இளைஞர்களை இன்னும் ஆழத்தில் போதையை ருசிக்க வைக்கவும் காலத்திற்கும் அடிமையாக வைக்கவும் டிஜே பார்ட்டி அரங்கேற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், வழக்கமான டிஜே பார்ட்டிகளில் அப்படி என்ன போதையின் ஆழம் என்ற கேள்வியில் விசாரித்த போது தான் அந்தப் பார்ட்டியின் பெயர் சைக்கேடேலிக் ராக்( psychedelic rock) என தெரியவந்தது. இதற்கு தமிழில் மாயத்தோற்றம் என்ற அர்த்தம்.

கோவையில் கால்வைத்த மாயத்தோற்றம் :

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அவரவர் கைகளுக்கு கிடைக்கும் போதைப் பொருட்களை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர். இதில், குறிப்பாக போதை வஸ்துகளுக்கு ஆழமாக அடிமையானவர்கள் புதுப்புது போதைகளை கண்டுபிடிக்கின்றனர்.



அதேபோல, ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஒரு மூளையில் ஏதோ ஒரு மக்கள் பயன்படுத்தி வரும் போதை வஸ்துகளை கண்டறிந்து பயன்படுத்தி சக நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதில், இப்படி ஒரு வித்தியாசமான வசீகர போதை தான் கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சியில் இசையுடன் கலந்து அரங்கேற்றப்பட்டது.

அதிரடி நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் :

இந்தப் போதை கூட்டம் தொடர்பான தகவல் அறிந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர்களான ஆய்வாளர்கள் சிவக்குமார், தேவராஜ், அனந்தநாயகி, உதவி ஆய்வாளர்கள் ஜெகன், ரேணுகா உள்ளிட்ட 60 பேர் கொண்ட குழுவினருடன் தனியார் காரில் சாதாரண உடையில் பொள்ளாச்சி சேத்துமடையிலுள்ள குறிப்பிட்ட ரிசார்ட்க்குள் திடீரென உள்ளே நுழைந்தனர். மேலும், போதையில் உள்ளே வந்தது யார் என்றுகூட தெரியாமல் நிலைதடுமாறி இருந்த கூட்டத்தை சுற்றிவளைத்தனர். பின்னர், அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த போதை மாத்திரை, போதை ஊசி, போதை எண்ணெய், கஞ்சா, வெளிநாட்டு மதுபானங்கள் என பல்வேறு போதைவஸ்துக்களை கைப்பற்றினர். அத்துடன் மாயை இசைக்கு பயன்படுத்த இருந்த அனைத்து பொருட்களையும் கைப்பற்றினர். 

கோவையில் முதல்முறையாக அரங்கேற இருந்த இந்த சீரழிவு சம்பவம் ஆரம்பத்திலேயே மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் முயற்சியால் தடுக்கப்பட்டது.



மயக்கத்தில் ஆழ்த்தும் சைக்கேடேலிக் ராக் (psychedelic) :

சைக்கேடெலிக் ராக் இசையை சாதாரணமாக கேட்கும்பொழுது ரசிக்க தோணாது. மேலும், சில நேரங்களுக்கு பின் தொடர்ந்து அந்த இசையை கேட்டால் தலைவலி கூட வந்து விடும். ஆனால், தடைசெய்யப்பட்ட அதிபோதை வஸ்துக்களை பயன்படுத்திய நபர்கள், அந்த இசையை கேட்டால் இசையின் ஆழத்தில் சென்று விடுவார்கள்.

மேலும், இந்த இசை போதை வஸ்துக்களை பயன்படுத்திய நபருக்கு மாயைகளை மனதில் உருவாக்கி இல்லாதவைகளை இருக்கிறதை போலவும், காற்றில் மிதப்பதைப் போலவும், பேசாத உயிரற்ற பொருட்களும் பேசுவது போலவும் உணரவைக்கும் என இந்த போதை வஸ்துக்களை பயன்படுத்தியவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஆபத்தான போதை வஸ்துக்களை பயன்படுத்தும் இளைஞர்கள் இந்த சைக்கேடேலிக் ராக் இசையை கண் முன் பலவண்ண விளக்குகளுடனும், வித்தியாசமான ஓவியங்கள் அல்லது பெரிய அளவிலான ஸ்கிரீனில் வித்தியாசமான காட்சிகளை காட்சிப்படுத்தி ரசித்து போதையின் உச்சிக்கு செல்கின்றனர்.

அரசின் அனுமதி பெற்ற மதுபான நடன பார்கள் இருப்பது போல, போதை வஸ்துக்களை பயன்படுத்தியவர்கள் சைக்கேடேலிக் ராக் இசையை அனுபவிக்க உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் தனி இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த செயல்பாடு இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்து விடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மனநல மருத்துவர் அனந்தன் கூறியதாவது :- குறிப்பிட்ட சில போதை வஸ்துக்களை பயன்படுத்தும் பொழுது பறப்பது போன்றும், மிதப்பது போன்றும், நடைமுறையில் நடக்காத கற்பனைகளும் நடப்பது போன்றும் தோன்றும். அதேபோல, அதி போதை வஸ்துகளை பயன்படுத்துபவர்கள் சைகேடலிக் ராக் இசையை கேட்கின்றனர். இந்த போதையுடன் இசையைக் கேட்பவர்கள் சாதாரணமாக கேட்காமல் வித்தியாசமாக கேட்கின்றனர். அந்த போதையில் உயிரற்ற விஷயங்களும் பேசுவது போல பிம்பத்தை ஏற்படுத்தும். மேலும், போதையில் இந்த வித்தியாசமான இசையை கேட்கும் பொழுது அவை பத்துமடங்கு போதையை தூண்டிவிடும்.

மதுபோதை அதிகமாகும் பொழுது மது அருந்தியவர் ஒன்று சண்டையிடுவர். இல்லையென்றால், தூங்கி விடுவர். ஆனால், அதிக போதை வஸ்துக்களை பயன்படுத்துபவர்கள் தூங்காமல் போதையின் ஆழத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பர். இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இரண்டு ஆண்டுக்கு மேல் பயன்படுத்தி வந்தால், அவர்களின் மூளை நரம்புகள் பாதிக்கப்படும். மேலும், இவர்கள் நாட்கள் செல்ல செல்ல சாதாரண நிலையில் இருந்து ஆபத்தான நிலைக்கு சென்று விடுவர், என தெரிவித்தார்.



தமிழக இளைஞர்களை சீரழிக்க திட்டமா..? 

சமீப காலமாக புது புது போதை கலாச்சாரங்கள் இளைஞர்களிடம் தொடர்ந்து பரவி வருகிறது.

குறிப்பாக, இந்தியாவைப் பொருத்தவரை கொல்கத்தா, மும்பை, கோவா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இந்த இசை நடனங்களுடன் போதைகளை அனுபவித்து வருகின்றனர். இந்த போதை வஸ்துக்களை பயன்படுத்திய நடனங்கள் அங்கொன்றும், இங்கொன்றும் சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த இசை நடனங்கள் கண்ணுக்கு தெரிந்தவரை இல்லை. ஆகவே, தமிழக இளைஞர்களை குறிவைத்து போதை கும்பல் வேறு வடிவங்களில் நுழைய பார்க்கின்றனர், என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ரஷ்யாவில் உள்ள போதை கடத்தல் கும்பலின் ஒருங்கிணைப்பா..?

பொள்ளாச்சியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் இந்த சைக்கேடேலிக் ராக் இசையுடன் போதை கலாச்சார நடனத்தை ரஷ்யாவைச் சேர்ந்த இல்லியன் சோரின் என்பவர் ஒருங்கிணைத்து உள்ளார். இவர், கோவாவில் இருந்து கேரள இளைஞர்களை சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைத்து பொள்ளாச்சி அழைத்து வந்துள்ளார். மேலும், இவர் டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்துள்ளார். இந்த விவகாரத்தில் மாவட்ட காவல்துறை சென்னையில் உள்ள ரஷ்யா வெளியுறவுத்துறைக்கு போதை விவகாரம் தொடர்பாக புகார் அளித்துள்ளது. மேலும், இந்த நபருக்கு ரஷ்யாவில் உள்ள போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா..? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, கைது செய்யப்பட்ட நபர்களிடம் அளவுக்கு அதிகமான போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்ததால் நீதிமன்ற பிணை கிடைக்க நாட்கள் நீளும், என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும், அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், ஒருபுறம் இளைஞர்களை கெடுக்க புது புது போதைப் பொருட்கள் சமூகத்தில் வலம் வந்து கொண்டே இருப்பது சமூகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே, இளைய சமுதாயம் தவறான போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளாமல், சந்தோஷமாக ஆரோக்கியத்துடன் வாழ முயற்சிகளை மேற்கொண்டால் அனைவருக்கும் நலம்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...