கோவை : கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்தி வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வரும் கோவை விமான நிலையத்தின் தேவைகளை செய்து தருமாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசுகள் செவிசாய்த்தபாடில்லை. இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் கோவை விமானத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, 2012-2013-ம் ஆண்டில் 12 லட்சத்து 97 ஆயிரத்து 804 ஆக இருந்த பயணிகளின் எண்ணிக்கை 2018-2019 ஆண்டில் 30 லட்சத்து 882 ஆக இருமடங்கு அதிகரித்துள்ளது.
ஆண்டு வரிசைப்படி பயணிகளின் எண்ணிக்கை
ஆண்டு - பயணிகள் எண்ணிக்கை
2012-13 : 12,97,804
2013-14 : 12,44,300
2014-15 : 14,29,198
2015-16 : 16,91,553
2016-17 : 21,04,904
2017-18 : 24,03,935
2018-19 : 30,00,882.
இந்த புள்ளி விவரங்களானது, கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை மட்டுமாக கருதாமல், விமான நிலையத்தை விரிவுபடுத்தும் அவசியத்தையும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதையும் உணர வேண்டும் என்பதையே காட்டுகிறது. மேலும், நாடு முழுவதும் அதிகளவிலான பயணிகள் பயன்படுத்தும் டாப் 20 விமான நிலையங்களில் கோவை விமான நிலையம் 19-வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி விமான நிலையம் 6.92 கோடி விமானப் பயணிகளுடன் முதல் இடத்திலும், மும்பை 4.88 கோடி பயணிகளுடன் 2-வது இடத்திலும், பெங்களூரூ 3.33 கோடி பயணிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
இதனிடையே, நில உரிமையாளர்களிடம் இருந்து நிலத்தைப் பெற்று 675 ஏக்கர் நிலங்களை கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கோவை விமான நிலையத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்திய விமான அதிகாரச்சபையும், ஓடுதளம், பார்க்கிங், கார்கோ காம்ப்ளக்ஸ், விமான நிலைய கட்டுமானங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது போன்ற வசதிகளை மத்திய அரசு செய்து கொடுக்கும்பட்சத்தில், கோவை விமான நிலையம் டாப் 10 விமான நிலையங்களுக்குள் இடம்பிடிக்க முடியும் என நம்பப்படுகிறது.