கூடலூரில் தமிழக - கர்நாடக அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்

நீலகிரி : கூடலூர் அருகே தமிழக - கர்நாடக அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

நீலகிரி : கூடலூர் அருகே தமிழக - கர்நாடக அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் வனப்பகுதி சாலையில் தமிழக - கர்நாடக அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தமிழக அரசுப் பேருந்தின் ஓட்டுநர் ஜலில் (40) மற்றும் கர்நாடகா அரசுப் பேருந்து ஓட்டுநர் பண்ணாரி (45) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். மேலும், இரு பேருந்துகளிலும் பயணம் செய்து வந்த பயணிகளில் 20-க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். 



படுகாயமடைந்த இரு பேருந்துகளின் ஓட்டுநர்களில் ஜலில் கேரளா மருத்துவமனையிலும், பண்ணாரி மைசூர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...