ஜெ., உயிரோடு இருந்திருந்தால் பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருப்பார் : சூலூரில் தினகரன் பிரச்சாரம்

கோவை : ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடந்திருந்தால், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்து இருப்பார் என்றும், ஆனால், இப்போதைய அரசு பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பதாக சூலூரில் பிரச்சாரம் செய்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.


கோவை : ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடந்திருந்தால், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்து இருப்பார் என்றும், ஆனால், இப்போதைய அரசு பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பதாக சூலூரில் பிரச்சாரம் செய்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். 

கோவை சூலூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமாருக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மாலை இருகூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.



அப்போது அவர் பேசியதாவது :- சூலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்திருக்கின்றது. எதிர்பாராதவிதமாக இந்த இடைத்தேர்தலில் நடைபெறுகிறது. கொங்கு மண்டலம் துரோகத்திற்கு துணை நிற்காது என்பதை நிரூபிக்க இந்த இடைத்தேர்தல் வந்திருக்கின்றது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருக்கட்டும் என சசிகலா தேர்வு செய்தார். அவர் நினைத்திருந்தால் என்னை கூட முதலமைச்சராக தேர்வு செய்து இருக்க முடியும். ஆனால், அவர் அதை செய்யவில்லை. 



தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வின் ஏஜென்ட்டாக செயல்பட்டார் என்பதால்தான், அவரை பதவி இழக்க வைத்து கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கினார். பதவியில் இருக்கவும் தன்னை காப்பாற்றிக் கொள்ளவும் எடப்பாடி பழனிச்சாமி செய்தது ராஜதந்திரமல்ல, சந்தர்ப்பவாதம். முதலமைச்சர் பதவிக்கு அவராக வந்தார் என்றால், ஒரு வயது குழந்தை போல் 4 காலில் தவழ்ந்து வந்து சசிகலா காலில் விழ வேண்டிய அவசியமென்ன..?. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்க வேண்டும் என வாக்களித்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 



சசிகலாதான் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி செய்துள்ளது கொங்கு மண்டலத்திற்கு இழுக்கில்லையா..?, துரோகிகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டாம். இவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய மாட்டார்கள். அ.தி.மு.க.விற்கு மாபெரும் தோல்வியை தர வேண்டும். ஜெயலலிதா யாருடன் எல்லாம் கூட்டணி வேண்டாம் என்று சொன்னார்களோ, அவர்களுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. மோடி அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை வந்து பார்க்கவே இல்லை. வடக்கில் இருந்து வருபவர்களுக்கு பயப்படுபவர்கள் அல்ல நாங்கள். 



பதவி ஆசை பிடித்தவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை படுதோல்வி அடையப் போகின்றது. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களை அதிகரித்து முதலமைச்சராக இருப்பவர்கள் மத்தியில், சட்டமன்ற உறுப்பினர்களை குறைத்து முதலமைச்சராக நீடிக்க எடப்பாடி பழனிசாமி முயல்கின்றார். எம்.எல்.ஏ. தகுதி நீக்க முயற்சிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மே 23-ம் தேதியுடன் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகின்றது. 



விவசாயி என்று கூறிக்கொண்டு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகின்றார் எடப்பாடி பழனிசாமி. பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் போல, ஜெயலலிதா இருக்கும் போது நடந்திருக்க முடியுமா..?. அப்படி செய்திருந்தால் கடுமையாக தண்டித்து இருப்பார். ஆனால், பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கின்றது. தமிழகத்தில் நல்லதொரு மக்களாட்சியை ஏற்படுத்த இதுபோன்ற கமிஷன் ஏஜென்டுகளிடம் இருந்து நாட்டை மீட்டு நல்லவர்களிடம் கொடுங்கள், இவ்வாறு அவர் கூறி வாக்குசேகரித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...