கூடலூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

நீலகிரி : கூடலூரில் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீலகிரி : கூடலூரில் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மரப்பாலம் சீனக் கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார். இவர், வழக்கம் போல் இரவு 8 மணியளவில் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தற்காலிக செட்டில் தனது இரண்டு இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இரவு 11 மணியளவில், இரு வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. 



இதையடுத்து, வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது வாகனங்கள் எரிந்து கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், யானைகளின் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்து கொண்டு வெளியே வந்து சேருவதற்குள் இரண்டு வாகனங்களும் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து உடனடியாக தேவாலா காவல் நிலையத்திற்கு முத்துக்குமார் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...