கோவை : தமிழகம் முழுவதும் பல்வேறு தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

ஜி.என். மில்ஸ் அருகே உள்ள அருள் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர், கட்டிட கான்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், இவரது வீட்டில் வேலைக்கார பெண்ணான சத்தியபாமா கடந்த ஏப்ரல் 3-ம் தேதி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென வீட்டுக்குள் புகுந்த இரு மர்ம நபர்கள் சத்தியபாமாவை தாக்கி விட்டு, வீட்டில் இருந்த 35 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதையடுத்து, மருதமலை அருகே உள்ள வடவள்ளி பகுதியில் வசித்து வரும் தங்கராஜ் என்பவரை இந்த கொள்ளை வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதில், தங்கராஜுக்கு தமிழகம் முழுவதும் கொள்ளை வழக்குகளில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த தங்கராஜ் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரின் உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.