நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் சுற்றுலா தலங்களுக்குச் செல்ல முடியாமல், சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் குன்னூரில் கடந்த சில நாட்களாக வெயிலுடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால் இந்த காலநிலையை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (தி்ங்கட்கிழமை) பிற்பகல் மழை பெய்த நிலையில், இன்று உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சீரான இடைவெளியில் விட்டு விட்டு பெய்து வரும் இந்த மழையினால், மழை நீர் சாலைகளில் கரை புரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பலர் தங்கும் விடுதிகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழை அணைப் பகுதிகளிலும் பெய்துள்ளதால், கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்க முடியும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.