கோவை : மதுக்கரை வனத்துறை அதிகாரி எம். செந்தில்குமார் கோவை மாவட்ட உதவி வனப் பாதுகாவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள வனத்துறை அதிகாரிகளில் 16 பேருக்கு பதவி உயர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மதுக்கரை வனத்துறை அதிகாரி எம். செந்தில்குமார் கோவை மாவட்ட உதவி வனப் பாதுகாவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். முன்னாள் உதவி வனப் பாதுகாவலர் நஷீரின் ஓய்வுக்குப் பிறகு, செந்தில்குமார் கோவை மாவட்ட உதவி வன பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் மதுக்கரை வனத்துறை அதிகாரியாக கடந்த 2016-ம் ஆண்டு முதல் எம். செந்தில் குமார் பணியாற்றி வருகிறார். இவரது பணிக் காலத்தின் போது, மதுக்கரை மகாராஜ் என்ற காட்டு யானை இடமாற்றம் ஆபரேசன் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.