கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நியூஸ் 18 தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் மற்றும் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரி, அவர்கள் மீது வழக்கு தொடுப்பதாக மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு கோவை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கோவை பத்திரிக்கையாளர் மன்றம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் முதலமைச்சர் பிரச்சாரத்திற்காக வந்த போது, அதனை செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நியூஸ் 18 தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் ராம்குமாரை அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் டேவிட் ரவிராஜன் தடுத்து நிறுத்தி தாக்க முயன்றுள்ளார். செய்தி சேகரிக்கும் பணி என்பதை விளக்க முயன்ற செய்தியாளர்கள் ஸ்டாலின், நவநீதகிருஷ்ணன் ஆகியோரை ஒருமையில் பேசியதோடு, அனைவரது மீதும் வழக்கு போடுவேன் எனவும் கூறி மிரட்டியுள்ளார்.

காவல்துறை அதிகாரி ஒருவரின் வாயில் இப்படியான வார்த்தைகள் வருவதை ஏற்க முடியாது. டேவிட் ரவிராஜன் ஏற்கனவே பொட்டிபுரம் காவல்நிலையத்தில் பணியாற்றிய போது, செய்தியாளர்கள் மீது உயரதிகாரிகளின் உத்தரவையும் மீறி வழக்கு போட்டு, பின் நீதிமன்றம், அரசு என பல்துறை தலையீடுகளுக்கு பிறகே பணிமாற்றம் செய்யப்பட்ட வரலாறு கொண்டவர். அதனாலேயே தான், எல்லா அதிகாரங்களையும் கொண்டவர் என்ற மமதை அவரது வார்த்தைகளில் வெளியாகியுள்ளது.
ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் மிரட்டி அடிபணிய வைத்து விட அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடிய இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தானது. ஜனநாயகத்தின் நான்காம் தூணாய் விளங்கும் பத்திரிகையாளர்களுக்கே இந்த நிலை என்றால், சாமானியனுக்கு இந்த அதிகாரியிடம் இருந்து நீதி எப்படி கிடைக்கும் என்பதை நினைத்தாலே வருத்தம் தான் மேலிடுகிறது.
செய்தி சேகரிக்கும் பணிக்கு இடையூறாக இருந்ததோடு, மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் டேவிட் ரவிராஜன் மீது தமிழக அரசும், தமிழக காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதோடு, இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு, தனது கடும் கண்டனத்தையும் பதிவு செய்கிறது.

இதேபோல, கோவையில் நேற்று மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொண்டு கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் செய்தியாளர்களை கேள்வி எழுப்ப விடாமல் அடிப்பேன், உதைப்பேன் என்ற ரீதியில் மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கும் கோவை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறது.
உண்மைகளை வெளிக்கொண்டு வர யாரிடமும் கேள்வி கேட்கும் உரிமையை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பத்திரிகையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. இந்த உரிமையை எந்த தனி நபரும், அமைப்பைச் சேர்ந்தவர்களும் தட்டிப்பறித்து விட முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்ட விரும்புகிறது கோவை பத்திரிகையாளர் மன்றம். பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் ஏன் தேவை என்பதை இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து உணர்த்துவதை கருத்தில் கொண்டு, இது குறித்து தேர்தல் காலத்திற்கு பிறகாவது அரசு உரிய பரிசீலனை செய்ய வேண்டும் என கோவை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.