திருப்பூரில் வீட்டில் இருந்த பனியன் கம்பெனி டெய்லர் கத்தியால் குத்திக்கொலை : போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூரில் வீட்டில் இருந்த பனியன் கம்பெனி டெய்லர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் வீட்டில் இருந்த பனியன் கம்பெனி டெய்லர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் செரங்காடு பிள்ளையார் கோவில் வீதியில் வசித்து வந்தவர் சிவக்குமார். கடந்த சில வருடங்களாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த இவர், தனியார் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். பிள்ளையார் கோவில் வீதியில் சொந்தமாக உள்ள வீட்டில் தனது தாயுடன் வசித்து வந்தார். நேற்றைய தினம் அவரது தாயார் திருச்செந்தூர் சென்றிருந்த நிலையில், நேற்றிரவு தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், ஊரிலிருந்து திரும்பி வந்த சிவக்குமாரின் தாய் வீட்டின் கதவை திறந்த போது சிவக்குமார் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், இரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.



இதனால், அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த ஊரக போலீசார் கைரேகை நிபுணர்களுடன் மற்றும் மோப்பநாயுடன் சோதனை மேற்கொண்டனர். பின்பு உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...