மேட்டுப்பாளையத்தில் வீசிய சூறாவளிக் காற்றுக்கு 50,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் : இழப்பீடு கோரும் விவசாயிகள்

கோவை : மேட்டுப்பாளையத்தில் சூறாவளிக்காற்றில் சிக்கி ஜம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : மேட்டுப்பாளையத்தில் சூறாவளிக்காற்றில் சிக்கி ஜம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிறுமுகை, பகத்தூர், அன்னதாசம்பாளையம், இடுகம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. கிணற்று நீர் பசனங்கள் மூலம் இந்த கிராமங்களில் பூவன், நேர்ந்திரன், கதிளி உள்ளிட்ட வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு இந்த பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் புரட்டியெடுத்த இந்த சூறாவளியில் சிக்கி சுமார் 50-000த்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது. 



நன்கு வளர்ந்த ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் நாசமானதால், ஒவ்வொரு விவசாயிக்கும் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஏற்கனவே வங்கிகள் மூலம் கடன் பெற்றே விவசாயம் செய்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்ட இந்த சூறாவளிக்காற்றால் தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக மாறியுள்ளதாக வேதனை தெரிவித்தனர். மேலும், சூறாவளிக்காற்றால் சேதமடைந்த வாழைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...